சென்னை: பேரவையில் கையை தூக்க கை வலிக்கிறதாம் அதிமுக எம்எஎல்ஏ கேள்விக்கு சபாநாயகர் பதில் அளித்தார். மேலும் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர்ந்து மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று பள்ளி கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது.

இன்று ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை & சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
பொதுவாக பேரவையில் மக்கள் பிரச்சினை குறித்த பேச, அவை நடவடிக்கையின்போது, உறுப்பினர்கள் கையை தூக்கினால், அதை பார்த்து பேரவை தலைவர் அவர்கள் அவையில் பேச வாய்ப்பு வழங்குவார். இப்படி இருக்கையில் பேரவையில் கையை தூக்க கை வலிக்கிறது, அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என ன அதிமுக எம்எல் பேரவையில் கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கை, அவரது சோம்பேறித்தனத்தை காட்டும் நிலையில், இப்படியெல்லாம் பேசக்கூடாது ன கூறிய சபாநாயகர், உங்கள் கை சரியாகட்டும், பின் உங்களுக்கு நேரம் தருகிறேன் என்றார்.
இதற்கு எதிர்வினையாற்றிய அவை முன்னவரான அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சி நண்பர்கள், கேள்வி நேரத்தில் துணை கேள்விகளை கேட்பதில் தவறில்லை. ஆனால், அதற்காக எழுந்து நின்று, (உங்களை) நையாண்டி செய்வது மரபு அல்ல. மாண்பை காக்க வேண்டும். இந்த கடம் மாண்பை காக்கும் இடம் என்று கூறினார்.
இதையடுத்து அதிமுக உறுப்பினரின் கை தூக்காமல், பட்டன் அமைப்பு முறை தர வேண்டும் என்று கோரிக்கைக்கு பதில் கூறிய சாபாநாயகர் அப்பாவு, பட்டன் அமைப்பு முறை குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
அவரது கேள்விக்கு பதில் கூறய அமைச்சர் எ.வ.வேலு , ஜா புயலால் சேதமடைந்த விருந்தினர் மாளிகைக்கு பதில் புதிய கட்டடம் கட்டித் தர கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து, அன்னவாசல் ஜல்லிக்கட்டில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரப்படுமா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, அன்னவாசல் ஜல்லிக்கட்டில் தற்காலிகமாக டேங்கர் மூலம் குடிநீர் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.