சென்னை:

ண்டிபட்டியில்  நேற்று இரவு அமமுக அலுவலகத்தில் இருந்து வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பணம், தங்களது கிடையாது, அதற்கும்,  அ.ம.மு.க.விற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று டிடிவி தினகரன் கட்சியின் தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் தடாலடியாக கூறி உள்ளார்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க டிடிவி தினகரன் கட்சியினர் பணம் பதுக்கி வைத்திருப்பபதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, ஆண்டிப்பட்டியில் டிடிவி தினகரனின்  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி அலுவலகத்தில் சோதனை நடத்த வருமான வரித்துறையினர், தேர்தல் அதிகாரிகள் சென்றனர். அவர்களை உள்ளே விடாமல், டிடிவி கட்சி தொண்டர்கள் மறித்து தகராறு செய்தனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் 4 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கட்சியினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சோதனையில், ரூ.1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், இவைகள் அனைத்தும்  94 பாக்கெட்டுகளில் வாக்காளர் பெயர் பட்டியல் வார்டு எண்ணுடன் வைக்கப்பட்டிருந்தது. இந்த பணம்  தேனி பாராளுமன்ற வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனுக்கு சொந்தமானது என்பதுஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ரூ.2 கோடியை கொண்டு வந்துள்ளனர் என்பது விசாரணையின்போது தெரிய வந்திருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரி முரளிக்குமார் கூறி உள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தங்கத்தமிழ்செல்வன்,  `நேற்றோடு பிரசாரம் முடிந்துவிட்டது, நேற்று நடைபெற்ற  சம்பவத்தில் எங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதற்காகதன்னிலை விளக்கம் கொடுக்கவே உங்களைச் சந்திக்கிறேன் என்றவர்,  நேற்று கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

பணம் இருந்ததாகச் சொல்லப்படும் காம்ப்ளக்ஸ், அ.தி.மு.க பிரமுகருக்குச் சொந்தமானது. அதில் எந்த முட்டாளும் பணத்தை வைக்கமாட்டான் என்று கூறியவர்,  இது திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட நாடகம் என்றும், வருமானவரித்துறை திட்டமிட்டு நாடகமாடுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

நேற்று நடைபெற்ற மோதலின்போது கைது செய்யப்பட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் திட்டமிட்டு அப்ரூவர் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறிய தங்கத்தமிழ் செல்வன், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யும்போது,  அடையாளம் தெரியாத 150 பேர் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.. அதன் காரணமாக  தேர்தலின்போது பூத்களில் இருக்கும் எங்கள் ஆட்களைக் கைது செய்யக்கூட திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் பகிர் தகவலை தெரிவித்தார்.

ஆனால், அதிமுகவினர் காம்ப்ளக்ஸ்சில் அமமுக கட்சி அலுவலகம் எப்படி செயல்படுகிறது என்பது  குறித்து அவரும் தெரிவிக்கவில்லை… நமது செய்தியாளர்களும் கேள்வி எழுப்பவில்லை.