லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் வெவ்வேறு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் நலமாக இருப்பதாக உ.பி. மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் 2 டோஸ்களாக போடப்பட்டு வருகின்றன. முதல் டோஸ் பெற்றதில் இருந்து 6 வாரங்களுக்கு பிறகு 2வது டோஸ் தடுப்பூசி போட வலியுறுத்தப்பட்டது. தற்போது, அதற்கான இடைவெளி 84 நாட்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. முதலில் எந்த தடுப்பூசி போடப்படுகிறதோ அதே தடுப்பூசிதான் 2வது டோஸ்-ம் எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில். உ.பி.யின் சித்தார்த்நகரில் சுமார் 20 கிராம மக்களுக்கு ஏப்ரல் மாதத்தில் டோஸ்  ஆக ‘கோவிஷீல்ட்’  தடுப்பூசி போடப்பட்டதாகவும், அவர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசியாக மே மாத நடுப்பகுதியில் ‘கோவாக்சின்’   தடுப்பூசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கூறிய  மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி இது ஒரு தவறான நடவடிக்கை என்பதை ஒத்துக்கொண்டதுடன், ஆனால், இவ்வாறு வெற்வேறு நிறுவன தடுப்பூசி பெற்றவர்கள் அனைவரும் ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள் என்று தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.