உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வா சந்தேலா தங்கம் வென்று அசத்தியுள்ளார். 16 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையில் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் டெல்லியில் ஐ.எஸ்.எஸ்.எஃப்.உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் சுடுதல் பெண்கள் பிரிவில் இந்தியா சார்பில் அபூர்வி சதேலா கலந்து கொண்டார். இன்று தொடங்கிய முதல் போட்டியிலேயே இந்தியா தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது.
10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இலக்கை 252.9 புள்ளிகளில் குறிவைத்து அபூர்வ சாந்தேலா முதலிடம் பிடித்துள்ளார். இதனை தொடர்ந்து முதலிடம் பிடித்த பூர்வா தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவரை தொடர்ந்து 230.4 புள்ளிகளில் இரண்டாம் இடம்பிடித்த சீன வீராங்கனை சூ ஹாங் வெண்கலப்பதக்கம் வென்றார்.
உலகக் கோப்பை போட்டியில் இந்தியா கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.