தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என வெற்றிப்பெற்று சாதனை படைத்துள்ளது. ஒருமுறை கூட அதன் சொந்த மண்ணி டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றாத நிலையில் இலங்கை அணி வென்று சாதனை படைத்துள்ளது.

south

தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன்படி நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் வித்யாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இலங்கை அணி வெற்றிப்பெற்றது.

இதனை தொடர்ந்து இரு அணிகளும் மோது 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் மார்க் ரம் 60 ரன்களும், டி காக் 86 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 222 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து விளையாடிய இலங்கை அணி வீரர்கள் ஏமாற்றம் அளித்ததால் 154 ரன்களுக்குள் அனைவரும் வெளியேறினர். அதன் பிறகு 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 2 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது. 2வது டெஸ்ட் தொடரை 8 விக்கெட் வித்யாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இலங்கை அணி வெற்றிப்பெற்றது.

சர்வதேச அளவில் முதலிடம் வகிக்கும் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை ஒருமுறை கூட கைப்பற்றியதில்லை. கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவுடன் நடைபெற்ற கடைசி டெஸ்ட் தொடரில் கூட 2-1 என இந்திய அணி தோல்வியை மட்டுமே சந்தித்தது. இந்நிலையில் அதன் சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவை இலங்கை அணி வீழ்த்தியது புதிய சாதனையாகவே பார்க்கபப்டுகிறது.