இன்று, ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை இன்று விண்ணில் ஏவி சாதனை படைக்க இருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்.
இந்தியவிண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) இன்று காலை ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை ஏவி சாதனை படைக்க இருக்கிறது இதற்கான 28 மணி நேர கவுண்டவுன் நேற்று அதிகாலை 5:28 மணிக்கு துவங்கியது. ஶ்ரீஹரிகோட்டா விண்வெளித்தளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணல் ஏவப்படும்.
PSLV-C37/Cartosat2 சீரிஸ் செயற்கைக்கோள் மிஷின் என்று இது அழைக்கப்படுகிறது. இஸ்ரோ இதற்கு முன்பு ஒரே நேரத்தில் 20 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதுதான் அதிகபட்சமான இந்திய சாதனையாக இருந்தது.
ரஷ்யா, அதிகபட்சமாக 37 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியதுதான் உலக சாதனையாக இருக்கிறது.
இப்போது அதைவிட கிட்டதட்ட இரு மடங்குக்கும் அதிகமாக ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைகோள்களை ஏவி உலக சாதனை படைக்க இருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்.