காஸா: பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை விமானப்படை மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் இன்று   தரைவழி தாக்குதலை  தொடங்க உள்ளது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக நீருபூச்ச நெருப்பு போல மோதல் நீடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த 7ந்தேதி (2023, அக்டோபர் 7)  இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த  ஹமாஸ் பயங்கரவாதிகள்  திடீரென ஏவுகணைக்கொண்டு தொடர்  தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கடும் கோபம் அடைந்த   இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசியும் விமானப்படை கொண்டும் குண்டுகளை வீசி  பதிலடி கொடுத்து வருகிறது. காசாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும்   இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 19-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதற்கிடையில்,, காசா மக்களுக்கு உணவு உள்ளிட்ட பிற தேவையான பொருட்களை இந்தியா உள்பட  பல உலக நாடுகள் வழங்கி வருகின்றன. இதற்கு இஸ்ரேலும், பாலஸ்தீனமும் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், காசா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை துவக்கியுள்ளது. காசாவில் இருக்கும் எரிவாயு நிலையத்தை இஸ்ரேல் அழித்துள்ளது. நேற்று காசா மீது கடுமையான விமான வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்திய நிலையில், இன்று இஸ்ரேலின் காலாட்படையும், கவசப் படையும்  தாக்குதலில் ஈடுபட்டு இருந்தன.