ஜெருசேலம்: கொரோனா காரணமாக இஸ்ரேலில் மீண்டும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது.

இஸ்ரேலில் பரவிய கொரோனா மே மாதம் கட்டுக்குள் வந்தது. தினமும் குறைந்த எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பொதுமக்கள் கட்டுப்பாடுகள் இன்றி சகஜ வாழ்க்கைக்கு திரும்பினர். இப்போது நிலைமை மாறி, கொரோனா தினசரி பாதிப்பு 5000ஐ தாண்டி வருகிறது. ஆகையால், தளர்வுகள் அற்ற ஊரடங்கினை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அடுத்த வாரம் முதல் திருவிழாக்கள் வருவதால் 3 வாரங்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு 500 மீட்டருக்கு மேல் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.