இந்தி, சமஸ்கிருதக் கலப்போடு, வரலாற்றையும் திரித்துக் கூறும் வகையில் இருக்கும்’ ஒன்றிய அரசின் பாடத் திட்டத்’ தை எப்படியாவது தமிழகத்தில் திணித்து விட வேண்டும் என்கிற ” ஆர். எஸ். எஸ்…. பா. ஜ. க…. வின் தீராதஆசை துடிக்கிறது!

அவர்களின் பிரதிநிதியான தமிழகப் புதிய ஆளுநர் ஆர். என். ரவி அவர்களும்.. அதற்கேற்ப, தமிழகப் பல்கலைக் கழகத் துணை வேந்தர்களை அண்மையில் அழைத்துப் பேசி இருக்கிறார்!

அப்போது, ‘ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை’ இங்கே அமல்படுத்துவது பற்றிப் பேசியதாக செய்திகள் வருகின்றன!

ஆளுநர் என்பவர், பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற வகையில் இந்தச் சந்திப்பு இயல்பே!

எனினும்.. இதன் நோக்கம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது! ஏற்கெனவே தமிழக அரசின் துறைச் செயலாளர்களிடம் ஆளுநர் கோப்புகளைக் கேட்ட விவகாரம் அடங்குவதற்குள் இந்த விவகாரம் அரசியல் அனலைக் கிளப்பி இருக்கிறது!

மாநில அரசின் அதிகாரங்களில் இப்படி ஒன்றிய அரசு ” மூக்கை நுழைக்கும்” வேலையைச் செய்வதை தமிழக மக்கள் கோபத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!!

—- ஓவியர் இரா. பாரி.