டி20 போட்டியில் 8.4 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆலவுட் ஆன ஐஸல் ஆப் மேன் அணி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
ஸ்பெயின் அணிக்கு எதிராக விளையாடிய ஐஸல் ஆப் மேன் அணி முதலில் விளையாடி 8.4 ஓவரில் ஆலவுட் ஆனது.
இதனையடுத்து 11 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஸ்பெயின் 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் குறைந்த ரன் இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணியாக ஸ்பெயின் அணி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.
இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையே உள்ள குட்டி தீவு நாடான ஐஸல் ஆப் மேன் அணி கடந்த 2017 ம் ஆண்டு ஐசிசி-யில் உறுப்பினரானது.
2016, 2018-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தகுதிச்சுற்றுப் போட்டியிலும் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஸ்பெயின் நாட்டுக்கு ஐசல் ஆப் மேன் நாட்டு அணி பயணம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே 6 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதுவரை நடந்த 5 போட்டிகளில் ஸ்பெயின் அணி 4-0 என்று வென்று இருந்தது. ஒரு போட்டி முடிவு இல்லை.
இந்நிலையில் கார்டாஜெனா நகரில் நேற்று முன்தினம் ஐசல் ஆப் மேன் அணிக்கும், ஸ்பெயின் அணிக்கும் இடையிலான இறுதி மற்றும் 6-வது டி20 ஆட்டம் நடந்தது. டாஸ் வென்ற ஸ்பெயின் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த ஐசஎல் ஆப் மேன் அணி 8.4 ஓவர்களில் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் ஸ்பெயின் வேகப்பந்துவீச்சாளர் கம்ரான் 3-வது ஓவரில், ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி மொத்தம் 4 விக்கெட்டுகளை எடுத்தார். ஸ்பெயின் அணியின் மற்றொரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அட்லிப் முகமது 4 விக்கெட்டுகளை வீழத்தினார்.
11 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஸ்பெயின் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் அவாசிஸ் அகமது, ஐசல் ஆப் மேன் அணி வீரர் ஜோஸப் பாரோஸ் வீசிய முதல் ஓவரின் இரு பந்துகளிலும் 2 சிக்சர்கள் விளாசி அணியை வெற்றி பெறச்செய்தார்.ஆட்டநாயகன் விருது அட்லிப் முகமதுக்கு வழங்கப்பட்டது.
டி20 வரலாற்றில் இதற்கு முன் குறைவான ஸ்கோர் என்பது கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த சிட்னி தண்டர் மற்றும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் இடையிலான ஆட்டத்தில் சிட்னி அணி 15 ரன்கள் சுருண்டது.
[youtube-feed feed=1]