தென்காசி:
கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் கொத்து கொத்தாக அதிகரித்து வருவதால், மக்கள் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல இடங்களில் இஸ்லாமிய சமூகத்தினர் அரசின் உத்தவை மதிக்காமல் செயல்படும் போக்கு அதிகரித்து வருகிறது.
தென்காசி மசூதியில், அரசின் ஊரடங்கு உத்தவை மீறி, மசூதியில் கூடிய இஸ்லாமியர்களை கலைந்துசெல்ல காவல்துறை அறிவுறுத்தியது. ஆனால், காவல்துறையினர் மீது கல் வீசப்பட்டதால், அவர்கள் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஊரடங்கு காரணமாக, பிரபலமான கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் உள்பட அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. மக்கள் வீடுகளியேயே இருந்து கொரோனா பரவல் ஏற்படுவதில் இருந்து பாதுகாத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தென்காசி நடுப்பேட்டை பள்ளிவாசலில், ஊரடங்கு உத்தரவை மீறி, ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகைக்கு கூடியது, அந்த பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி வட்டாட்சியர் சண்முகம், காவல் ஆய்வாளர் ஆடிவேல் மற்றும் போலீஸார் அப்பகுதிக்கு விரைந்து சென்ற, அவர்கள் அனைவரும் கலைந்துசெல்ல அறிவுறுத்தினார்.
ஆனால், அவர்கள் அதை ஏற்க மறுத்து, வாக்குவாதம் செய்து, நாற்காலிகளை காவல்துறையினர் மீத வீசியதாகக் கூறப்படுகிறது. இதையமுத்து, அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதற்கிடையில் சில போலீசார் மீது கல்வீச்சும் நடைபெற்றது.
இதில், காவல் ஆய்வாளர் உட்பட 2 போலீஸாருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.