துஷான்பே:

ஜிகிஸ்தான் சிறையில் இஸ்லாமிய போராளிகள் கலவரம் செய்ததை தொடர்ந்து, அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 32 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

தஜிகிஸ்தான் நாட்டில் வாக்தாத் நகரில் உள்ள சிறைச்சாலையில் உள்ள இஸ்லாமிய கைதிகளும், மற்ற கைதிகளுக்கும்  இடையே திடீரென தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதையடுத்து சிறைக்காவலர்கள் அவர்களை கட்டுப்படுத்த முயற்சி செய்தும், அது பலனிக்காத நிலையில், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு  நடத்தினர்.

இந்தக் கலவரத்தில் 32 சிறைக் கைதிகள் பலியாகினர். பலியானர்வர்கள் பலர்  ஐஎஸ் தீவிரவாதிகள். இதில் பாதுகாவலர்களும் கொல்லப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளது.

இந்தக் கலவரத்திற்குத் தூண்டுதலாக இருந்தவர் தஜிகிஸ்தான் படைப் பிரிவின் தலைவராக இருந்த கல்முரட் காலிமொவ்வின் மகன் பெக்ரஸ் குல்மர்ட் என்று அந்நாட்டின் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது சிறையில் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், கலவரம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் சிறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.