க்னோ

டனக் கொண்டாத்துடன் நடக்கும் இஸ்லாமிய திருமணத்தை மத குருமார்கள் நடத்தி வைக்க மாட்டார்கள் என இஸ்லாமிய மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இஸ்லாமியத் திருமணங்கள் மதக் குருமார்களான காஜிகள் மூலம் நடைபெறுவது வழக்கம்.   திருமண நேரத்தில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் தனித் தனியே அமர்ந்திருப்பார்கள்.   மண ஒப்பந்தத்தை எழுதிய பிறகு காஜி இருவரிடமும் அதை  படித்துக் காட்டி சம்மதத்தை கேட்பார்.  அவர்கள் சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்ட பின் திருமணம் முடியும்.

தற்போது  பிரபலமான திரைப்பட மற்றும் மெல்லிசைப் பாடல்களுக்கு நடனமாடுவது இஸ்லாமிய திருமணத்தில் பிரபலமாகி வருகிறது.   இதற்கு பல இஸ்லாமிய மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.    இது குறித்து உத்திரப் பிரதேச இஸ்லாமிய அமைப்பின் தலவரான முஃப்தி அசார் ஹுசைன், “இஸ்லாமியர்கள் தங்கள் திருமணத்தில் நடன நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.  அது இஸ்லாத்திற்கு எதிரானது.

அத்தகைய  இஸ்லாத்துக்கு எதிரான திருமணத்தை காஜிக்கல் நடத்தி வைக்க மாட்டார்கள்.   நிக்கா (திருமணம்) என்னும் புனிதமான இடத்தில் இது போல ஆட்ட பாட்டங்கள் நடக்கக் கூடாது.   அப்படி நடந்தால் அந்த திருமணத்தை நடத்தி வைக்க காஜி வர மாட்டார்.    நடன நிகழ்வை வேறு இடத்திலும் திருமணத்தை வேறு இடத்திலும் நடத்தினால் மட்டுமே காஜி திருமணத்தை நடத்தி வைப்பார்.

அத்துடன் பெண்களுக்கு திருமணத்தன்று விதவிதமான புர்க்காக்கள் அணிந்துக் கொள்வதும் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.  திருமணத்தன்று நவநகரீகமாக புர்கா அணிந்து செல்ஃபி எடுத்துக் கொள்வது கூடாது.   அத்துடன் திருமணத்துக்கு முழு உடலையும் மறைக்கும் உடைகள் மட்டுமே அணிந்துக் கொள்ள வேண்டும்.”  என தெரிவித்துள்ளர்.

கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி ஒரு இளைஞர் மரணம் அடையும் தறுவாயில் தனது உடல் உறுப்புக்களை தானம் செய்ய எழுதிக் கொடுத்துள்ளார்.  அதற்கும் முஃப்தி அசார் ஹுசைன் உடல் உறுப்புக்கள் தானம் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என அனுமதி தர மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது