உள்ளாட்சித்தேர்தல் நடத்த விருப்பம் உள்ளதா? தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி கிருபாகரன் கேள்வி!

Must read

சென்னை,

ள்ளாட்சித்தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் விருப்பத்துடன் உள்ளதா என்றும், நீதிமன்றத்தைப் பற்றி மாநில தேர்தல் ஆணையத்துக்கு கவலையில்லை என்றும் ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் மாநில தேர்தல் ஆணையம்மீது  குற்றம் சாட்டினார்.

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அடோபர் மாதம்  24-ந் தேதியுடன் முடி வடைந்தது.  அதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 17, 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், இடஒதுக்கீடு சரிவர பின்பற்றவில்லை என்று திமுக வழக்கு தொடர்ந்ததையடுத்து உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் தேர்தல் குறித்த விசாரணையின்போது பல்வேறு காரணங்களை கூறி, அவகாசம் தேவை உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசும், தமிழக தேர்தல் ஆணையமும் தாமதப்படுத்தி வந்தன.

இந்நிலையில்,   உள்ளாட்சி தேர்தல் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கிருபாகரன் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் விருப்பத்துடன் உள்ளதா என்றும், நீதிமன்றத்தைப் பற்றி மாநில தேர்தல் ஆணையத்துக்கு கவலையில்லை என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து வாதாடிய  மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நெடுஞ்செழியன், தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. வார்டு வாரியாக வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன், தேர்தல் பட்டியலை அறிவிப்பதற்கு பணிகளை முடிக்க கெடு நிர்ணயித்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

More articles

Latest article