சென்னை:

திமுகவின் செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிடித் தலைவர்  கண்டனம் தெரிவித்து உள்ளது.

மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் மற்றும், ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில் காங்கிரசாரை திமுகவினர் புறக்கணித்து உள்ள நிலையில், திமுகவின் கூட்டணி தர்மம் இதுதானா? என்று  மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய பெருந்தலைவர், துணைத் தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் இன்று (ஜனவரி 11) நடைபெற இருக்கிறது.

திமுக கூட்டணி அதிகளவில் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்களை வென்றிருந்தபோதிலும் அதிமுக கூட்டணியைக் காட்டிலும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதால், காங்கிரஸ் உறுப்பினர்களை திமுக புறந்தள்ளி வருகிறது. ஏற்கனவே தேர்தலின்போதும் காங்கிரஸ் கட்சியினருக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்வில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது பகிரங்கமாக வெளிப்பட்டு உள்ளது.

மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவியை திமுக வழங்காதது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒன்றிய ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய பதவியிடங்களை தராதது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்று திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.