சென்னை:

ரெயில்வேயில் பயணிகளுக்கு வழங்கப்படும் காபி, டீ போன்றவை ரெயில் பெட்டியின் கழிவறையில் உள்ள தண்ணீர் கலந்து விற்பைன செய்யப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது நாட்டு மக்களிடையே குறிப்பாக ரெயில் பயணத்தை விரும்பும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில் பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருக்கும் ரெயிலின் ஒரு பெட்டி அருகே, நீலநிற உடையுடன் கேன்டீன் ஊழியர் ஒருவர் அங்குமிங்கும் கண்ணை அலைபாய விட்டப்படி பரபரப்பாக எதையோ எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்.

இடையிடையே ரெயில் பெட்டின் கழிவறை பகுதிக்கும் சென்று வந்துகொண்டிருந்தார். இந்நிலையில், சிறிது நேரத்தில், அந்த ரெயில் பெட்டியின் கழிவறைனுள் இருந்து சில காபி கேன்கள் வெளியே உள்ள நபரிடம் கொடுக்கப்பட்டது. அதை அவர் மற்ற கேன்டீன் ஊழியர்களிம் விநியோகம் செய்து, விற்பனைக்காக செல்லப்படுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும் ஸ்வாச் பாரத் என்று தூய்மை இயக்கத்தை செயல்படுத்தி வரும் மோடி அரசு, திறந்த வெளி கழிவறைகளை தவிர்க்க வலியுறுத்தி வருகிறது. ஆனால், ரெயில்வே துறையோ  கழிவறையில் உள்ள தண்ணீரை கலந்து காபி, டீ விற்பனை செய்து மக்களை வஞ்சித்தும், ஏமாற்றியும் வருகிறது. இது எவ்வளவு பெரிய சுகாதார சீர்கேடு.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்திய ரெயில்வே. உலகின் மிகப்பெரிய ரெயில்வே துறைகளில்  இந்திய ரெயில்வே துறையும் ஒன்று. ஒரு நாளைக்கு சுமார் லட்சகணக்கனோர் பயணம் செய்யும் ரெயில்வே துறையில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிம் செய்வதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற சிறப்பு வாய்ந்த ரெயில்வேயில், பயணிகளுக்கு விற்பனை செய்யப்படும் டீ, காபி போன்றவற்றில் கழிவறை நீரை கலந்து விற்பனை செய்வது, இந்திய ரெயில்வே துறையின் பொறுப்பற்ற செயலுக்கு சான்றாக உள்ளது.

ரெயில்வேயில் பயணிகளின் வசதிகளுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி உள்ளதாக மார்தட்டும் இந்திய ரெயில்வே, இதுபோன்று, தன்னை நம்பி பயணிக்கும் பயணிகளின் வாழ்க்கையில் விளையாடுவது எந்த வகையில் நியாயம்.

ரெயில் பயணத்தை விரும்புபவர்கள் குறிப்பாக வயதானவர்கள், கர்ப்பிணிகள் குழந்தைகள் போன்றோர் தங்களது களைப்பை மறக்க சூடா டீ, காபி வாங்கி பருகுவது இயல்பு. இந்நிலையில், டீ, காபி கழிவறை தண்ணீர் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதை பார்க்கும்போது, இனிமேல் ரெயில் பயணம் மேற்கொள்ளும் எந்தவொரு நபரும் டீ காபி போன்ற உணவு பொருட்களை வாங்கி உண்ண பயப்படும் நிலையே ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ரெயில்வே உணவுகள் தரமற்றதாக இருப்பதாக பயணிகள் புகார் கூறி வரும் நிலையில், அதை கண்டுகொள்ளாமல் ரெயில்வே துறையும், ஐஆர்சிடிசி நிறுவனமும்  செயல்பட்டு வருகிறது. இந்த ஆக்கத்தில் பிரதமர் மோடி இந்தியாவில் புல்லட் ரெயில் கொண்டு வரப்போவதாக  கூறி வருகிறார்.

பயணிகளுக்கு சுத்தமான, சுகாதாரமான, சுவையான உணவை தர மறுக்கும் ரெயில்வே துறை, ரெயிலில் விற்கப்படும் உணவுப்பொருட்கள் மற்றும்  ரெயில்குடிநீருக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வசூலித்து வருகிறது. இது வெட்கக்கேடு.

அவ்வப்போது ரெயில் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசு, ரெயில் பயணிகளுக்கு சுதாரமான முறையில் உணவு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,  நியாயமான விலையில், தரமான, உணவுகளை பொதுமக்களுக்கு வழங்க ஒப்பந்ததாரர்களுக்கு ரெயில்வே துறை வலியுறுத்த வேண்டும என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இல்லையேல் ரெயிலில் பயணிக்கும் பயணிகள் ரெயில்வே உணவுகளை மொத்தமாக புறக்கணிக்க வேண்டிய சூழல் உருவாகும் என்பதில் ஐயமில்லை.

(ரெயில் பெட்டியில் கழிவறை தண்ணீர் கலக்கப்படும்  டீ, காபி குறித்த வைரல் வீடியோ)