சென்னை:
க்களின் உயிரை விட டாஸ்மாக் வருவாய்தான் முக்கியமா? தமிழக அரசுமீது சென்னை உயர்நீதி மன்ற 3 நீதிபதிகள் அமர்வு சாட்டையை சுழற்றியது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை தலைமைநீதிபதி சாஹி தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரணை இன்று விசாரணை நடத்தியது.
ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்ற அமர்வில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.  , தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தலைமையில் நீதிபதிகள் வினித் கோத்தாரி, நீதிபதி பி.என் பிரகாஷ் ஆகியோர் கொண்ட 3 பேர் அமர்வு  காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்தியது.
அப்போது, கேள்வி எழுப்பிய  தலைமை நீதிபதி மக்களின் உயிரை விட வருவாய் திரட்டுவது முக்கியமானதா என  காட்டாக கேள்வி எழுப்பினார்.
டாஸ்மாக் காரணத்தால், தமிழகத்தில் அமைதி, சட்டம்ஒழுங்கு சீர்குலைந்தால் நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டிருக்காது.
அரசியல் சாசன விதிகளை அமல்படுத்தும் கடமை நீதிமன்றங்களுக்கு உள்ளது  என்றும் கடுமையாக கூறினார்.
இதனையடுத்து, தமிழக அரசு சார்பில் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் நாளை ஒத்திவைத்தனர்.,