(பைல் படம்)

சென்னை :

மெரினாவில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

உச்சநீதி மன்றம் விதித்த கெடு முடிந்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ள மத்திய அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனபோக்கினை கண்டித்தும், காவிரி மேலாணம் வாரியம் அமைக்க வலியுறுத்தியும், சென்னை மெரினாவில் மாணவர்கள் கூட இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலானது.

இதன் காரணமாக  மெரினாவில் கண்ணகி சிலை, விவேகானந்தர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை யினர் குவிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு எதிராக மெரினால் நடைபெற்ற  மாணவர்கள் போராட்டம் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த நிலையில், தற்போது காவிரிக்காக மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்துவதாக செய்தி வெளியானதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.