சென்னை: தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. சீட்டா?. அப்படி நாங்கள் சொல்லவே இல்லை… என அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா  விஜயகாந்த் 2025ம் ஆண்டு பிப்ரவரி 12ந்தேதி அன்று  நினைவூட்டினார்.

இந்த நிலையில்,  “தே.மு.தி.க-விற்கு மாநிலங்களவை சீட் தருவதாக நாங்கள் எப்போது கூறினோம்?”என எடப்பாடி பழனிச்சாமி, கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த ஆண்டு ( 2024)  நடைபெற்று முடிந்த   18ஆவது மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இது தொடர்பாக  அதிமுக தேமுதிக இரு கட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.  அந்த  கூட்டணி ஒப்பந்தத்தின்படி,  அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட்டை வழங்க அதிமுக முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது,  ஆனால், அதுதொடர்பான ஒப்பந்தம் ஏதும் வெளியிடப்படவில்லை.  முன்னதாக கூட்டணி பேச்சுவார்த்தையின்போது,   தேமுதிகவின் முக்கிய கோரிக்கையான ஒரு ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக இழுபறி நீடித்து வந்த நிலையில், பின்னர் அதிமுக இறங்கி வந்தது. அதன்படி,  2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகத்திற்கான மாநிலங்களவை தேர்தலில், அதிமுக கூட்டணியின் சார்பில் தேமுதிகவிற்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டும் என உறுதி அளித்ததாக தேமுதிக தலைவர் பிரேமலதா கூறி வருகிறார்.

இந்த நிலையில்,  தே.மு.தி.க-விற்கு மாநிலங்களவை சீட் தருவதாக நாங்கள் எப்போது கூறினோம்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-விற்கு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று பிரமேலதா கூறி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் உறுதி! நினைவூட்டிய பிரேமலதா