டெல்லி:

ந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல் இல்லை என்று இந்திய அரசு கூறி வருகிறது. ஆனால், சீனா ஊடுருவி வருகிறது என்பதை ஆதாரத்துடன் அம்பலடுத்தி உள்ளார்   ராணுவ நிபுணர் அஜய்சுக்லா.

இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் ஊடுருவல் இல்லை என்று மத்திய அரசு கூறி வருவதற்கு, பிரபல எழுத்தாளரும், பாதுகாப்பு பொருளாதாரம், மூலோபாய விவகாரங்கள் மற்றும்  இந்திய ராணுவ நிபுணரான அஜய் சுக்லா ஆதாரங்களுன் பதில்  தெரிவித்து உள்ளார்.

இந்த விவகாரத்தில் மோடி அரசு காது கேளாதது போல அமைதியாக இருக்கிறது . அவர்களின் சமோசாக்கள்,  மற்றும் முகவர்கள் சீனாவை அமைதியாக இந்திய பிரதேசத்தை பாக்கெட் செய்ய அனுமதிக்கிறார்கள் என்று கடுமையாக சாடியுள்ளார்.

இந்தியா – சீனா எல்லை பிரச்சனை மீண்டும்  கடந்த சில வாரங்களில் பூதாகரமாகி உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள   லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தியா தனக்கு சொந்தமான இடம் என்று கருதும் எல்லைப்பகுதிகளில் சீனப் படைகள் கூடாரம் அமைத்து, சுரங்கங்கள் தோண்டி அதன் வழியாக கனரக உபகரணங்களை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே டோக்லாம் பிரச்சினையில்  சீனாவின் ஊடுருவலை 73 நாட்கள் எதிர்கொண்டு நின்று முறியடித்தது இந்தியா. இதனால் டோக்லாமை கைப்பற்றிவிடலாம் என்கிற சீனாவின் கனவு தகர்ந்து தவிடு பொடியானது.

தற்போது உலகமே சீனா பரப்பிவிட்ட கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகின்றன. இநத நிலையில் சீனா மீண்டும் எல்லையில் வாலாட்ட தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்போது சீனா குறிவைத்திருப்பது,  லடாக் எல்லைகள். லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாங்கோங் டிசோ, தவுலவத் பெக் ஓல்டி மற்றும் கால்வன் பள்ளத்தாக்கு பகுதிகள்.

கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா கட்டுமானப்பணிகளை செய்வதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. “சூழல் மோசமாக உள்ளது.

இந்தியாவுக்கு சொந்தமானது என்று ஏற்கனவே சீனாவால் ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிக்குள்ளே அவர்கள் தற்போது நுழைந்துள்ளனர். அதனால், அங்கிருந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது” என்கிறார் இந்திய ராணுவ நிபுணரான அஜய் சுக்லா.

இதுதொடர்பான பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியான நிலையில்,  அது தொடர்பான  வீடியோ மற்றும் படத்தைப் பயன்படுத்தி,  துல்லியமான இடத்தைக் கண்டுபிடித்து, சீன ஊடுருவலை இராணுவம் பின்னுக்குத் தள்ளியது என்று  கூறப்படுகிறது.

இதை எதிர்கொள்ள இந்தியாவும் ராணுவத்தை குவித்து வருகிறது. ஆனால், இது தொடர்பாக ஏதும் தெரிவிக்காமல்,காது கேளாதது போல இந்திய அரசு மவுனம் காத்து வருகிறது. ஆனால், அதிகாரிகளோ சீனா ஊடுருவல் இல்லை என்று தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அரசு , சீன ஊடுருவல்களுக்கு இணங்க எல்லையை (எல்ஏசி) மறுவடிவமைப்பதன் மூலம் “ஊடுருவல் இல்லை” என்று கூறுகிறது.

எல்.ஐ.சி எப்போதும் ஃபிங்கர் 8 இல் இருந்தது. இப்போது பி.எல்.ஏ விரல் 4 வரை ஆக்கிரமித்துள்ளது என்று அஜய் சுக்லா சுட்டிக்காட்டி உள்ளார். (கீழே உள்ள படத்தை காண்க)

சில வாரங்களுக்கு முன்பு செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி பல நிலைப்பாடுகள்  அறிவிக்கப்பட்டன.  சீன துருப்புகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவியிருபதற்கான புகைப்படங்கள் வீடியோக்கள்  வெளியாகின. பின்னர்,  இந்திய துருப்புக்கள் சீன துருப்புக்களையும் அவர்களின் வாகனத்தையும் தாக்கியதாகக் காட்டப்படுவது போன்ற அங்கீகாரமில்லாத வீடியோவும் வெளியானது.

இந்த நிலையில்தான்  நிலைமையைப் பற்றிய நமது ஆரம்ப மதிப்பீட்டை இது காட்டுகிறது – இந்திய நிலப்பரப்பில் சீன ஆக்கிரமிப்பு இல்லை – இது மிகவும் சரியானது. செயற்கைக்கோள்கள் எந்த “ஆக்கிரமிப்பையும்” காண வில்லை என்பதற்கான காரணம், எதுவும் இல்லை. அதற்கு பதிலாக, என்ன நடக்கிறது என்பது இந்தியா மற்றும் சீனாவின் படைகள் ஒருவருக்கொருவர் எல்லைக்குள் வேகமாக ஊடுருவுகின்றன.

சீனாவின் ஆத்திரமூட்டலின் ஈர்ப்பு மிகவும் தீவிரமானது என்றாலும், இந்தியா இதைத் தடுத்தது என்பதைக் கவனியுங்கள், சீனர்களை பின்னுக்குத் தள்ளி, தடுப்பை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக விரைவாக பதிலடி கொடுத்தது.

ஏற்கனவே  கார்கில் போருக்கு பொறுப்பான எங்கள் பிரிவு வெளியேற்றப்பட்டபோது, சீனர்கள் 1999 ஆம் ஆண்டில் ஃபிங்கர் 5 க்கு சாலை அமைத்தனர். இப்போது, கடந்த பதினைந்து நாட்களில், விரல் 8 முதல் விரல் 4 வரையிலான பாதை ஒரு சாலையில் பிளாக் டாப் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதை தெரிவித்துள்ள அஜய்சுக்லா நாளை இதுகுறித்து விரிவான கட்டுரை வெளியிடப்போவதாகவும் அறிவித்து உள்ளார்.

அஜய்சுக்லா ஏற்கனவே ரஃபேல் போர் விமான விவகாரத்தில் பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்திய குறிப்பிடத்தக்கது.