பாக்தாத்:

தற்கொலை படையாகமாறி உயிரை மாய்த்துக்கொள்ளுங்கள் என ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு அதன் தலைவர் அபு பக்கர்- அல் பாக்தாதி கட்டளையிட்டுள்ளார்.

ஈராக்கில் அந்நாட்டுப்படைகளுக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும்போர் நடந்துவருகிறது.
ஈராக் அரசு 3 மாதங்கள் கடும் போராட்டத்துக்குப் பிறகு ஐ எஸ் அமைப்பினரின் பிடியிலிருந்து மொசூல் நகரின் கிழக்குப் பகுதியை  கடந்த ஜனவரிமாதம்  மீட்டது. அப்போது ஐஎஸ் ஸின் தலைவர் மீது நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவலும் தெரியவில்லை. இந்நிலையில் நேற்று
அவரது பிரயாவிடை பேச்சு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது சொற்பொழிவு துண்டறிக்கைகளாக மேற்கு மொசூல் நகரில்
பதுங்கியிருக்கும் இயக்கத்தின் மற்ற போராளிகளுக்கு அனுப்பப் பட்டது.

அதில் அவர், போர் நெருக்கடியான சூழலில் உள்ளது.
போராளிகள் தப்பித்துக் கொள்ளுங்கள் அல்லது மலைகளில் பதுங்கி உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர்,
ஈராக் படை உங்களை சுற்றிவளைத்துவிட்டால் தற்கொலைப் படையாக மாறி உயிரை மாய்த்துக் கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார்.
ஐஎஸ் தலைவரின் நெருங்கிய தளபதிகள் தற்போது சிரியாவுக்கும், ஈராக்குக்கும் இடையில் இருக்கும் எல்லைப்புறங்களுக்குத் தப்பிவிட்டதாக
தகவல் வெளியாகியுள்ளது.