ஜெயலலிதா பற்றி முதல்வர் எடப்பாடி சொன்னது உண்மையா

Must read

சென்னை:

இன்று நடந்த சென்னை மெட்ரோ ரயில் திட்ட திறப்புவிழா நடந்தது இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர் ஜெயலலிதா என்றும் இது அவரது கனவுத்திட்டம் என்றும் பேசினார்.

ஆனால், இது உண்மையல்ல என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

“மெட்ரோ ரயில் திட்டத்தை ஜெயலலிதா எதிர்க்கவே செய்தார். அவரது கனவாக இருந்தது மோனோ ரயில் திட்டம்தான்.

கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போதுகூட, மெட்ரோ ரயில் திட்டத்தை எதிர்த்தே பேசினார். இந்த பேச்சு பல ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.

பிறகு மெட்ரோ ரயில் திட்ட துவக்கவிழாவில் முதல்வர் என்கிற முறையில் ஜெயலலிதா கலந்துகொண்டார் என்பதும், நிர்வாக ரீதியாக உதவியாய் இருந்தார் என்பதும் உண்மையே.

ஆனால், ஜெயலலிதாவின் கனவுத்திட்டம் இது என்பது உண்மையல்ல.

இதை மேலும் உறுதிப்படுத்துவது போல, கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி மெட்ரோ ரயிலில் பயணித்த தி.மு.க.வின் மு.க. ஸ்டாலின், “மெட்ரோ ரயில் திட்டத்தை ஜெயலலிதா எதிர்த்து பேசிவந்தார்” என்பதை செய்தியாகளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்” என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

More articles

Latest article