சென்னை:  பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, மகாராஷ்டிரா மாநில கவர்னராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தற்போது மகாராஷ்டிரா மாநில கவர்னராக இருந்து வரும், தமிழ்நாடு மாநில பாஜகவின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இடத்துக்கு தமிழ்நாட்டைச்  சேர்ந்த மூத்த பாஜக தாலைவரும்,காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான   எச். ராஜா என்று அழைக்கப்படும் ஹரிகரன் ராஜா சர்மா (Hariharan Raja Sharma)  நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எச்.ராஜா தற்போது தமிழ்நாடு பாஜக  ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.

துணைகுடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணனின் வெற்றி உறுதியாகி உள்ளது.   பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் அதிகமாக இருப்பதால் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதைத்தொடர்ந்து வரும் 21ந்தேதியுடன் முடிவடையும்,   பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா  மகாராஷ்டிரா மாநில அல்லது ஏதாவது ஒரு மாநில ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.