`காலா’ ரஜினிக்கு மனைவியாகும் ஈஸ்வரி?

னுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படம் `காலா’ என்ற கரிகாலன்.

இந்த  படத்தின் தலைப்பு வெளியானதில் இருந்து அவ்வப்போது புதுப்புது தகவல்களும், சர்ச்சைகளும் வெளியாகி வந்தவண்ணம் உள்ளது.

இந்த படத்தில் வில்லன் கேரக்டரை பிரபல இந்தி பட நாயகன்,  நானா படேகர்  அரசியல்வாதி  வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதுபோல் மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் மனைவி இந்த படத்தில் பாடல் பாட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், காலா படத்தில், ரஜினி ஜோடியாக ஹூமா குரோஷி நடிக்க இருப்பதாக  முன்பு கூறப்பட்டது.

ஆனால் `காலா’ படத்தில் கரிகாலனின் மனைவியாக 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஈஸ்வரி ராவ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மாறாக ஹூமா குரோஷி, படத்தில் ரஜினியின் தோழியாகவோ அல்லது காதலியாகவோ வரலாம் என்றும் கிசு கிசுக்கப்படுகின்றன.

மற்றொரு நாயகியான அஞ்சலி பாட்டீல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சம்பத், பங்கஜ் த்ரிபாதி, அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

மும்பையில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ள ரஜினி, ஜுன் 24-ம் தேதி மீண்டும் படப்பிடிப்பில் இணைகிறார்.


English Summary
Is Eswari, wife of 'Gala' movie in Rajini?