சென்னை:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு சிறப்பு தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட விக்ரம்பத்ரா இன்று திடீரென டில்லி விரைந்தார். இதன் காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் ரத்து செய்யப்படலாம் என்று பரபரப்பு நிலவி வலுருகிறது.
ஆர்.கே.நகர் இடத்தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இன்றுடன் பிரசாரம் ஓய்வு பெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக அனைத்து கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்து உள்ளனர்.
கடந்த சில நாட்களாக பணம் பட்டுவாடா செய்ததாக பலர் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக கட்சியினர் சாலை மறியல் போன்ற போராட்டங்கள் நடத்தினர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் முறைகேடு நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்துக்கு வந்த தொடர் புகார்களை அடுத்து,
ஐ.ஏ.எஸ். அதிகாரியான அதிகாரி விக்ரம்பத்ரா வை சிறப்பு தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் நியமித்தது.
அவ்ர் தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதியை கடந்த சில தினங்களாக ஆய்வு செய்தார். இதேபோல் தேர்தல் பார்வையாளர்களும் தொகுதி நிலவரங்களை ஆய்வு செய்து வந்தனர்.
அப்போது, காமிரா கண்காணிப்பு, போலீசார் பாதுகாப்பு உள்பட கடுமையான கடுமையான கண்காணிப்புகளையும் மீறி பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக புகார் கூறப்பட்டன.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம்பத்ரா இன்று திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
அங்கு தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்கும் அவர், ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள் தயாரித்த அறிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையத்திடம் அவர் சமர்ப்பிக்கிறார்.
இதன் காரணமாக ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் திக் திக் மனநிலையில் உள்ளனர். தேர்தல் முறைகேடு காரணமாக தேர்தல் மீண்டும் ரத்து செய்யப்பட்டுவிடுமோ என அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் உள்ள பொதுமக்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சியினரும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.