சென்னை:
தமிழ்நாட்டில் பா.ஜ., ஆட்சி தான் நடக்கிறதா?’ என, திமுக எம்.பி., கனிமொழி கைது குறித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கனிமொழி தலைமையில் திமுக மகளிர் அணியினர் கவர்னர் மாளிகை நோக்கி மெழுகு வர்த்தி ஏந்தி பேரணி சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் கனிமொழி கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், கனிமொழி கைது குறித்து திமுக எம்.பி., ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது:
ஹத்ராஸ் அராஜகத்தைக் கண்டித்து, திமுக மகளிரணி நடத்திய ஒளி ஏந்திய பேரணியை தடுத்து, தமிழக போலீஸ் கைது செய்திருக்கிறது. உ.பி., கொடூரத்துக்கு இது கொஞ்சமும் குறைந்தது அல்ல. தமிழ்நாட்டில் பா.ஜ., ஆட்சி தான் நடக்கிறதா? அ.தி.மு.க., அரசு தனது அராஜக குணத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.