அ.தி.மு.க.வுடன் தினகரனை இணைக்க பா.ஜ.க. திட்டமா?

முன்னாள் முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூரு சிறையிலிருந்து ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி விடுதலை ஆவார் என பா.ஜ.க. நிர்வாகி ஆசீர்வாதம் என்பவர் டிவிட்டர் பக்கத்தில் பரபரப்பு தகவலை வெளியிட்டிருந்தார்.

பா.ஜ,.க.வின் நூலக துறையில் ஒருங்கிணைப்பாளராக உள்ள அவரது ட்வீட், பல்வேறு ஹேஷ்யங்களை எழுப்பியது.

அ.தி.மு.க.வையும், டி.டி.வி. தினகரன் தலைமையில் இயங்கும் அ.ம..மு.க.வையும் இணைக்கும் முயற்சியில்  பாரதிய ஜனதா கட்சி முழு மூச்சில் இறங்கி இருப்பதாகவும் ஒரு செய்தி பரவியது.

’இது உண்மையா?’’ என பா.ஜ.க.பொதுச்செயலாளர் முரளீதர ராவிடம் கேட்டபோது அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

இவர் தமிழக பா.ஜ,க, விவகாரங்களைக் கவனிப்பவர்.

‘’ டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க.வில் இணைப்பது அவர்கள் உட்கட்சி விவகாரம்.,இந்த விவகாரத்தில் எங்களுக்கு எந்த தொடர்பும், பங்கும் இல்லை’’ என்று மறுத்துள்ளார்.

இது குறித்து தினகரனின் அ.ம.மு.க. நிர்வாகிகளிடம் கேட்டபோது’’ இரு கட்சிகள் இணைவது குறித்து சசிகலாவும், டி.டி.வி. தினகரனும் தான் முடிவு செய்வார்கள்’’ என்று தெரிவித்தார்.

-பா.பாரதி.