தமிழகத்துக்கு புதுச்சேரி  300 கோடி ’மொய்’…

அண்டை மாநிலமான புதுச்சேரியில் மதுபானங்கள் விலை, குறைவாகவே இருக்கும்.

தமிழ்நாட்டில்  110 ரூபாய்க்கு விற்கப்படும் குவாட்டர் மது பாட்டில் ,பாதி விலையில் புதுச்சேரியில் கிடைக்கும்.

இதனால் புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழகத்தின் எல்லைப்பகுதிகளில் வசிக்கும் ’குடிமக்கள்’’ புதுச்சேரிக்குச் சரக்கு அருந்த  சென்று விடுவார்கள்.

ஆனால் புதுச்சேரி அரசு, கடந்த மே மாதம் 16  ஆம் தேதி சரக்கு விலையை 120 % ,உயர்த்தியதால், அங்கு மது விற்பனை அதலபாதாளத்துக்கு சரிந்து விட்டது.

தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் பெரிய வித்தியாசம் இல்லாததால், தமிழகத்து குடிமக்கள் எல்லை தாண்டிப் போவதில்லை.

புதுச்சேரி மாநிலம் மது விலையை அதிகரித்ததால், எல்லையில் உள்ள விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட ’’டாஸ்மாக்’’ கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.

இந்த நிதி ஆண்டில், இந்த மாவட்டங்களின் அதிக விற்பனை காரணமாக,  டாஸ்மாக் நிறுவனத்துக்குக் கூடுதலாக 300 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இந்த புண்ணியம், புதுச்சேரியைத்தான் சேரும்.

-பா.பாரதி.