திண்டிவனம்: அன்புமணிக்காக அரசியலில் 2 தவறுகள் செய்துவிட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் விரக்தியுடன் தெரிவித்துள்ளார் ஒன்று,   அன்புமணியை மத்திய  அமைச்சராக்கியது, மற்றொருன்று , அவருக்கு கட்சி  தலைவர் பதவி கொடுத்தது என  தெரிவித்துள்ளார்.

மேலும்,  கத்தி, கபடா கொண்டு தாக்குதல் நடத்துவதுதான் அன்புமணியின்  டீசண்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்சா என்றும்  கேள்வி எழுப்பினார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது,, “பாமாகவில் இப்போது ஒரு கும்பல் சுற்றி வருகிறது. அந்த கும்பலுக்கு தலைமை அன்புமணியும், அவரின் மனைவி செளமியாவும்தான் என்று சாடியவர்,  47 ஆண்டுகளாக  அவர்களை மதித்து நான் கட்சியையும் சங்கத்தையும் நடத்தி வந்தேன் என்று சாடியதுன் அரசியல் நான் சில தவறுகளை செய்து விட்டடேன் என்றும் கூறினார்.

அதாவது,  நான் செய்த தவறு,.  அன்புமணியை மத்திய சுகாதார அமைச்சாராக ஆக்கியது,  மற்றும் பாமகவின் கட்சி தலைவராக உருவாக்கியது தான் என்று தெரிவித்தவர்,  அமைதியாக பாமக கட்சியை நடத்தி வந்த நிலையில், தற்போது  கட்சியில் பிளவு ஏறட்டுள்ளதாக, அரசியல் கடையினரும், பொதுமக்களும் நினைக்கும் வகையில்  அவர்களின் பேச்சு மற்றும் நடவடிக்கைகள் இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

அந்த கும்பலில் உள்ளவர்கள் நான் வளர்த்த பிள்ளைகள், அய்யா என்று அழைத்தவர்கள் தான்,  இன்று சில காரணங்களுக்காக அவர்கள் (அன்புமணி) சொல்படி என்னையும், ஜி.கே.மணியையும் திட்டி வருகின்றனர் என்றார்.

பாமக எம்எல்ஏக்கள்  5  பேரில்,  2 பேர் என்னோடு இருக்கின்றனர். 3 எம்.எல்.ஏ க்கள் அன்புமணி கும்பலோடு தெரியாமல் போய்விட்டார்கள் என்ற ராமதாஸ்,  அவர்களுக்கு தெரியும் அய்யாவை போன்று அவரால்,   கட்சியை நடத்த முடியாது என்று. பல தலைவர்களோடு கூட்டணி வைத்ததை, மறைந்த தலைவர்களும், தற்போது உள்ள தலைவர்கள் என்னை பாராட்டி இருக்கிறார்கள், என் மீது அவதூறு பேசியதில்லை” என்றார். மேலும், பிரதமர் மோடி கடந்த தேர்தலில் பாராட்டியதையும் ராமதாஸ் சுட்டிக்காட்டினார்.

46 ஆண்டுகளில் பல போராட்டம் செய்து போராட்டத்தில் வன்முறை இருக்காது, கத்தி, கபாட இருக்காது, மற்றவர்கள் மனம் நோகாத அளவிற்கு விமர்சனம் செய்து வந்துள்ளேன். ஏற்கனவே தமிழ்நாட்டில் 32 மாவட்டம் இருந்தது, தற்போது 38 மாவட்டம் 6 மாவட்ட உருவாக்கம் செய்ய போராட்டம் செய்து பெற்றுள்ளேன் என சுட்டிக்காட்டிய ராமதாஸ்,

தமிழ்நாட்டில் நாகரிமாக, நலினமாக கட்சி நடத்தி வந்த நான், அன்புமணி யும், செளமியாவும், நான் வளர்த்த சிலபேரை அழைத்து பொறுப்பு கொடுத்து வருகின்றனர். இதுபோன்ற கூத்துக்கள் கோமாளிகள் செய்து வந்த நிலையில் தற்போது புதிய பாணியை கடைப்பிடிக்கின்றனர். என்னை பற்றியும், என்னோடு இருப்பவர்களை பற்றி அசிங்கமாகவும், அவதூறாகவும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர் என வருத்தத்துடன் கூறினார்.

சில கட்சிகளில் சில பிரச்சைகள் உண்டு, ஆனால் இப்படி எல்லாம் கத்தி, கபடா வைத்து எ தகராறு செய்கின்றனர். துப்பாக்கியை கூட ஏந்துவார்கள் என ராமதாஸ் தெரிவித்தனர். புதுவிதமான அரசியல் கலாச்சாரத்தை அன்புமணி செய்து வருகின்றார். நல்ல கொள்கைகளை கற்பித்து செயல்படுத்தி வருகின்றேன். ஆனால் இவர்கள் மோசமான கலாச்சாரத்தை செய்து வருகின்றார் அன்புமணி என்று குற்றம் சாட்டினார்.

டீசண்ட் டெவலப்பண்ட் பாலிடிக்ஸ் என்று முன்னர் அன்புமணி பேசும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தற்போது கத்தி, கபடா என்று சண்டைப்போட்டு சிறைக்கு செல்லு கின்றனர். இதைத்தான் டீசண்ட் டெவலப்மெண்ட் என்று அன்புமணி பேசினாரா?

சேலத்தில், அருள் எம்.எல்.ஏ துக்கம் விசாரிக்க சென்றார்.  ஆனால், அங்கு வன்முறை நடைபெற்றுள்ளது.  நல்ல வேலை அவர் தப்பி பிழைத்தார். அவர்களோடு  வந்தவர்கள்மிது ஆயுதங்களோடு  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, அவரது கார் அடித்து கார் நொறுக்கி 18 பேர் மருத்துவமனையில் உள்ளனர் இதுவா டீசண்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ், இதுவா நாட்டை வளம் பெருக்கும்? என்று கேள்வி எழுப்பினார்.