570 கோடி வங்கிப் பணமா ?

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

aஒவ்வொரு வங்கிக்குமே, காஷ் ஹோல்டிங் லிமிட் இருக்கிறது. அதாவது, இவ்வளவுதான் பணத்தை வால்டில் வைத்துக்கொள்ளலாம் என்று விதி இருக்கிறது. இதை பெரும்பாலும், வங்கிகள் தாண்ட முயற்சிக்காது. காரணம், இதன் மேல் வங்கிகளின், தலைமையகம், ட்ரான்ஸ்ஃபர் ப்ரைசிங் எனப்படும் ஒரு நட்டத்தை தலையில் கட்டும். அதாவது, புழக்கத்திலில்லாத, வால்டில் இருக்கும் பணம் என்பது, உபயோகமற்றது. இது கடனாகவோ, அல்லது சுழற்சியிலேயே இருக்க வேண்டும் என்பது தான் இதன் பிசினெஸ் லாஜிக். அப்படியானால், இந்த பணத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். இடமாற்றம் செய்யாத ஒவ்வொரு நாளும் நட்டம்தான்.

உபரி பணத்தை என்ன செய்வது? மற்ற வங்கிகள்….ரிசர்வ் வங்கி அல்லது, ஸ்டேட் வங்கி லாக்கரில் கொண்டு செலுத்தும். அதேபோல், ஸ்டேட் வங்கி.. கரென்சி செஸ்ட், அதாவது, பணத்தை வைக்கும் ஸ்டராங்ரூமில் செலுத்தும். இது பெரும்பாலும், ஸ்டேட்வங்கிக்குள்ளே இருக்கும். இருந்தாலுமே, இந்த பணம், ரிசர்வ் வங்கியின் பணமாய் கருத்தப்படும். இதில்… ஸ்டேட் வங்கி செலுத்தும் பணத்துக்கு, அதன் சென்னை ரிசர்வ் வங்கி அக்கௌண்டில் க்ரெடிட் வந்துவிடும்.
ஏடிஎம் மற்றும், மற்ற வங்கிகள், பணம் எடுத்துக்கொண்டது போக, இந்த கரென்சி செஸ்ட்டுக்குமே, ஒரு லிமிட் உண்டு. இதை தாண்டினால், ரிசர்வ் வங்கி, குச்சி எடுத்து சாத்த ஆரம்பிக்கும். அதனால், ரிசர்வ் வங்கியே, தனி போலிஸ் படையோடு, ரயிலோ, அல்லது காஷ் கொண்டு செல்லும் கேஷ் வேன்களை, உபயோக்கிக்கும். இதில், துப்பாக்கி ஏந்திய காவலாளிகள் மற்றும் ஒரு போலீஸ் டீமே இருக்கும். இதற்காக, ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவை. இதைத்தவிர, ரிசர்வ் வங்கி ஆசாமியோ, ஸ்டேட் வங்கி காசாளர் ஒருவரோ, பணத்தோடு, கண்டிப்பாக பயணிக்க வேண்டும். (இப்படி நான் கூட பயணித்து இருக்கிறேன்).
இதை தாண்டி.. ஒட்டுநரை நம்பி, அல்லது, மூன்றாவது ஏஜென்சிகளை (செக்யூரிட்டி ஏஜென்சீஸ்) நம்பி பணம் கொடுத்தாலும், போலீஸ் அல்லது துப்பாக்கி ஏந்திய காவலாளி கண்டிப்பாய் இருக்க வேண்டும். இதற்கு 100 சதம் இன்சியுரன்ஸ் செய்து இருக்கிறார்களா என்பது அடுத்த கோணம். இதற்கும் லிமிட் உண்டு. 570 கோடியெல்லாம் இப்படி எடுத்து செல்ல வாய்ப்பே இல்லை.
இப்படி அடிப்படை விதிகளை, எதையுமே கடைப்பிடிக்காமல், ..பணம் கொண்டு சென்ற கண்டைனர்கள் வங்கியுடையது என்பதை, சுத்தமாய் நம்ப முடியவில்லை. அப்படி அனுப்பிய வங்கி மேலாளர், கேள்வி கேட்காமல் வீட்டுக்குத்தான் அனுப்பப்படுவார். அதைவிட, இவர்களை நம்பி போட்ட நம் பணத்தை இப்படித்தான் கையாள்வார்களா?
எளிதாய், இது வேறு ஏதோ கழகத்தின் பணம் தான் என்று எண்ணத்தான் தோன்றுகிறது. உண்மை அப்படித்தான் இருக்கலாம். இத்தனை விதிமீறல்கள் இருக்க சான்ஸே இல்லை. 570 கோடி என்பது ஒரு கரென்சி வால்டின் பணமாய் இருக்க முடியாது. அருண் ஜெட்லீ.. ரிசர்வ் வங்கி கவர்னர் தான் பதில் சொல்ல வேண்டும்
-சீனியர் போராளி

More articles

Latest article