கரூர்: கரூர் மாநகராட்சி கூட்டத்தில் பேனா, பென்சில் வாங்க ரூ.50லட்சம் செலவானதாக கூறப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பிய கவுன்சிலர்களை சஸ்பெண்டு கரூர் மாநகராட்சி திமுக மேயர் கவிதா நடவடிக்கை எடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் இடிஅமீன் ஆட்சியா நடக்கிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கரூர் மாநகராட்சி அலுவலக தேவைக்கு, 50 லட்சம் ரூபாய் செலவில் எழுது பொருட்கள் வாங்க தீர்மானம் போடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சாதாரண பேனா, பென்சில், பேப்பர் வாங்க ரூ.50 லட்சம் தேவைப்படுமா? என அதிமுக உள்பட சில கட்சி கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, மேயரை எதிர்த்து கேள்வி எழுப்பிய கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கவுன்சிலர்கள் சுரேஷ் மற்றும் ஆண்டாள் தினேஷ், கரூர் மாநகராட்சியில், 50 லட்ச ரூபாய் ஊழல் செய்திருப்பதாக குற்றம் சாட்டினர். மேலும், கடந்த மாத மாநகராட்சி கூட்டத்தில், அலுவலக பணிக்காக எழுது பொருட்கள், பேப்பர், கணினி ரசீது, பதிவேடுகள் வினியோகம் செய்ய, 25 லட்சம் ரூபாய் டெண்டர் வைக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாத கூட்டத்தில், கடந்த கூட்டத்தில் வைத்தது போல, அலுவலக பயன்பாட்டிற்காக எழுது பொருட்கள் வாங்க, 25 லட்சம் ரூபாய்க்கு தீர்மானம் வைக்கப்பட உள்ளது.
இரண்டு தீர்மானங்களும், அவசரம் கருதி, மேயர் முன் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
பேப்பர், பேனா வாங்க ஓராண்டுக்கு, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கியதோடு, அவசர தேவை என்றும் குறிப்பிட்டுள்ளனர். விதி மீறி, அதிகாரிகள் முறைகேடாக முன் அனுமதி என்ற பெயரில் பணிகளை மேற்கொள்கின்றனர்.
மாநகராட்சியில் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்ட நிலையில், பென்சில், பேனா, பேப்பர் வாங்க, 50 லட்சம் ரூபாய் தேவையில்லை.
இது குறித்து கூட்டத்தில் புகார் தெரிவிக்க இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார். மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் கூறுகையில், ”எழுது பொருட்கள், பதிவேடுகள் மட்டுமின்றி, கணினி பிரின்டருக்கு தேவையான பொருட்கள் வாங்கவே ஓராண்டுக்கு, 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.
கரூர் மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவை சேர்த்த கவிதா கணேசன் இருப்பது குறிப்பிடத்தக்கது.