2018-ம் ஆண்டு மே மாதம் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’படம், பலராலும் விமர்சிக்கப்பட்டது. விமர்சனங்கள் எதிர்மறையாய் இருந்தாலும் வசூலில் படத்தைத் தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்கு நல்ல லாபம் கிடைத்தது.
அதை தொடர்ந்து சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்திலேயே இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது .
அந்தக் கதையைக் கேட்ட சில நாயகர்கள் நடிக்கத் தயக்கம் காட்டவே, சந்தோஷ் பி ஜெயக்குமார் நடிக்கவும் உள்ளார்.
இதில் கரிஷ்மா, அக்ரிதி , ஷம்மு , டேனி, ரவி மரியா, சாம்ஸ், மனோபாலா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பாங்காக் சென்று சில முக்கிய காட்சிகளைப் படமாக்கவுள்ளனர். மே மாத வெளியீட்டுக்குப் படம் தயாராகிவிடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.