இனிதே நடைபெற்றது இரும்பு பெண்மணி ‘இரோம் சர்மிளா திருமணம்’

Must read

கொடைக்கானல்,

ல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில், இனிதே நடைபெற்றது இரும்பு பெண்மணி இரோம் சர்மிளா வின் திருமணம்.

கொடைகானலில் உள்ள பதிவு அலுவலகத்தில், மணிப்பூர் மாநில போராளி இரோம் சர்மிளா தனது காதலனை கை பிடித்தார். அவர்களது திருமணம் பதிவு செய்யப்பட்டது.

மணிப்பூர் மாநிலத்தில் ஆயுத சட்டத்தை எதிர்த்து பல ஆண்டுகளாக பட்டினி போராட்டம் நடத்திய வர் இரோம் சர்மிளா. “மணிப்பூர் போராளி” என்றும் “இரும்புப் பெண்மணி” என்றும் அம்மாநில மக்களால் அழைக்கப்படுகிறார்.

தற்போது தமிழகத்தில் கொடைக்கானலில் வசித்து வருகிறார். இதைத்தொடர்ந்து  , தனது காதலனுடன் திருமணம் செய்வதற்காக கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இரோம் சர்மிளாவின் திருமணம் கொடைகானலில் நடக்கக்கூடாது எனவும் அவர் கொடை கானலை விட்டு வெளியேறவேண்டும் எனவும் பல எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில் எதிர்ப்புகளை மீறி, அவர் விண்ணப்பித்திருந்த சார்பதிவாளர் அலுவலகத் தில்  இரோம் சர்மிளா தனது காதலர் தேஸ்மந்த் கொட்டினிக் கோ-வை  பதிவு திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணத்தின் போது ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குனரும் சமூக ஆர்வலருமான திவ்யபரதி உடனிருந்தார்.

More articles

Latest article