டில்லி

நேற்று பங்குச் சந்தையில் அறிமுகமான ரூ.320 மதிப்பிலான ஐஆர்சிடிசி பங்குகள் விலை ரூ. 727  வரை உயர்ந்துள்ளது.

பொதுவாக பங்குச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் பங்குகள் முதல் நாளன்று அதிக அளவில் விலை ஏறுவது குறைவாகும்.  இதற்கு முதலீட்டாளர்களின் அமோக வரவேற்பு தேவையாகும்.  கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தினத்தன்று கொச்சின் ஷிப் யார்ட், நகர்ப்புற வீட்டு வசதி வாரியம் ஆகிய பங்குகள் பெருமளவில் விலை உயர்ந்தன.

நேற்று இந்திய ரெயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி நிறுவனப் பங்குகள் அறிமுகம் செய்யப்பட்டன.           இந்த நிறுவனத்தின் பங்குகள் மத்திய அரசின் நிதி திரட்டும் நடவடிக்கையின் கீழ் பங்குச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன   முதல் நாளன்றே இந்த பங்குகளுக்கு கடும் கிராக்கி இருந்து வந்தது.

இந்த நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.320 என்னும் நிலையில் நேற்று மும்பை பங்குச் சந்தையில் ரூ.673 வரையிலும் தேசியப் பங்குச் சந்தையில் ரூ. 662 வரையிலும் நேற்றைய முதல் நாளில் விற்பனை ஆனது.   இன்று இந்த பங்குகளின் விலை ரூ.727 ஐ எட்டி உள்ளது.