சாரிட்டீஸ் எய்ட் ஃபவுண்டேஷன்ஸ் என்ற அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் முகமறியாத அந்நியர்களுக்கு உதவுவதில் ஈராக்கியர்கள் முதலிடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
81% ஈராக்கியர்கள் முந்தைய மாதத்தில் முகமறியாத யாரோ ஒரு அந்நியருக்கு உதவியதாக தெரியவந்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் லிபியா இருக்கிறது. இந்த இரண்டு நாடுகளுமே போரினாலும் உள்நாட்டு கலவரத்தாலும் சின்னாபின்னமாக சிதைக்கப்பட்டவை. இதைவிட மேலும் ஒரு அதிசயம் என்னவென்றால் இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் நாடு சோமாலியா ஆகும்.
தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்கும் நாடுகளில் முதலிடத்தில் மியான்மர் நாடு இருக்கிறது. இந்நாட்டில் பத்தில் ஒன்பது பேருக்கு தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்கும் வழக்கம் இருக்கிறதாம். பெளத்த மதத்தில் இருக்கும் “சங்க தானா” என்ற வழக்கமே இவர்களது கொடுக்கும் வழக்கத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது.