காசா மீதான மனிதாபிமானமற்ற தாக்குதலை தொடர்ந்தால் இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்க ஈரான் தயங்காது என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்துள்ளார்.
ஈரான் தொலைகாட்சி மூலம் பேசிய ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை எந்த ஒரு நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இன்று காசாவை பாதுகாக்க முன்வராவிட்டால் நாளை ஈரானில் இதுபோன்ற தாக்குதல் நடக்கக்கூடும் தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி என்று கூறிக்கொண்டு தங்கள் தாக்குதல் எல்லையை விரிவுபடுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த முயற்சியை முறியடிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈரான் இறங்கும் என்று எச்சரித்துள்ளார்.
ஈரானின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா இயக்கமும் களமிறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.