டெஹ்ரான்:

ரான் தலைநகர் டெஹ்ரானில், மது விருந்தில் நடனமாடியதாக இளைஞர்கள் மற்றும் யுவதிகள் 230 பேரை கலாச்சார காவல் படை கைது செய்து சிறையில் அடைத்தது.

ஈரான் நாட்டில், இஸ்லாமிய கலாச்சாரம் முழுமையாக அமல்படுத்தப்படுகிறது. பெண்கள் முக்காடு இன்றி வெளியில் நடமாடக்கூடாது, ஆண்கள் கட்டாயமாக தாடி வைத்திருக்க வேண்டும், மது அருந்தக்கூடாது, நடனம் ஆடக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள் உண்டு.

இதுபோன்ற கட்டுப்பாடுகளை மீறுவோரைக் கண்காணிக்கு தண்டிக்க கலாச்சார காவல் படை என்று தனி அமைப்பே உண்டு.

கலாசாரக் காவலர்கள், `எர்ஷத்` என்று அழைக்கப்படுகிறார்கள். பாரசீக மொழியில் இதற்கு, `வழிகாட்டுதல்` என்று அர்த்தம்.

இப்படையின் தலைவராக  கர்னல் ஸுல்ஃபிகர் பர்ஃபார் என்பவர் பொறுப்பு வகிக்கிறார்.

இந்த நிலையில் நேற்று தலைநகர் டெஹ்ரானில் மது விருந்து நடத்தியதோடு, நடனம் ஆடியதாக 230 பேர் கலாச்சார காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மது அருந்தினால் கைது செய்யப்பட்டு 80 கசையடிகள் என்று அங்கு சட்டம் உண்டு. ஆனாலும் இதுவரை அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது.

ஆனால் இந்த விருந்தில் கலந்துகொண்ட 230 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  ஆகவே அவர்களுக்கு கசையடி உண்டு என்பது உறுதியாகி இருக்கிறது.

இது குறித்து கலாச்சாரக் காவல்படையின் தலைவர் கர்னல் ஸுல்ஃபிகர் பர்ஃபார் தெரிவிக்கையில், “அந்த விருந்தில் மது பரிமாறப்பட்டதுடன் போதைப் பொருட்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. நடனமும் ஆடியிருக்கறார்கள். விருந்தினரில் சிலர் அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதை அடுத்து எங்களுகு விபரம் தெரியவந்தது. அவர்கள் அத்தனை பேரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

ந்த நிகர்னல் பர்ஃபார், இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்கள், ‘இன்ஸ்டகிராம்’ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டிருந்தன என்று தெரிவித்துள்ளார்.

மது அருந்தினால், தண்டனையாக 80 சவுக்கடிகள் கூட கிடைக்கலாம் என்ற சட்டம் இருந்தாலும், சமீப காலங்களில், மது அருந்துபவர்களுக்கு அபராதமே விதிக்கப்படுகிறது.

பெண்கள், இஸ்லாமிய ஆடைக்கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்களா என்பதையும் இவர்கள் உறுதி செய்கிறார்கள்.

லாவசன் பகுதியில் இருக்கும் ஒரு பூங்காவில் 140 பேர் கைது செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள 90 பேர் வடக்கு மாவட்டமான ஃபெர்மானியேவில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு நிகழ்ச்சிகளிலும் பாடிய பாடகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அங்கிருந்து சில மதுபானங்களும், போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஈரான் சூழலை அறிந்தவர்கள், “கட்டுப்பாடுகள் இருந்தாலும், அரசுக்கு தெரியாமல் ஆங்காங்கே மது விருந்துகள் களைகட்டும். இரவு முழுதும் நடக்கும் அந்த விருந்தில் பாடகர்கள் இசை நிகழ்ச்சி நடத்த..  விருந்தினர்கள் நடனத்தில் திளைப்பது உண்டு. போதை உற்சாகத்தில் சிலர் விருந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதால் சிக்கிக்கொண்டனர்” என்று தெரிவிக்கிறார்கள்.