1
 
 
சென்னை:
தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம் அவ்வப்போது நடந்துவருகிறது.  இந்நிலையில் புதுக்கோட்டை, சேலம், கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 12 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் எஸ்.பி.,யாக மயில்வாகனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட எஸ்.பி.,யாக ராஜராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை எஸ்.பி.,யாக லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,யாக ஜியா உல் ஹக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை போக்குவரத்து துணை ஆணையராக எஸ். சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக சசி மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தெற்கு பிராந்திய ஊழல் தடுப்பு காவல் கண்காணிப்பாளராக சரோஜ் குமார் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சட்டம் ஒழுங்கு துணை ஐ.ஜி.,யாக திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு சிறப்பு படை காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சீரூடை பணியாளர் தேர்வாணைய காவல் கண்காணிப்பாளராக பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நிஷா பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர தெற்கு துணை ஆணையராக அரவிந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
– இவ்வாற அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.