சென்னை:
27 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் தொடர்பான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் சற்றுமுன் பிறப்பித்துள்ளார். இதில் மொத்தம் 27 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய இடத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிர்வாக ரீதியில் பணிகள் சரியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் இடமாற்றம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் கடந்த ஜூன் மாதம் பதவியேற்றதும் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். இதேபோல் ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் (ஆகஸ்ட் 4) தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் பிறப்பித்துள்ள உத்தரவில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
1 – பிரஜ் கிஷோர் ரவி ஐபிஎஸ், சென்னை சிவில் பாதுகாப்பு இயக்குநர் டிஜிபி – Tangedco டிஜிபியாக நியமனம்
2 – கே.வன்னிய பெருமாள் ஐபிஎஸ், Tangedco டிஜிபி – சிவில் விநியோகத்துறை டிஜிபியாக நியமனம்
3 – ராஜீவ் குமார் ஐபிஎஸ், காத்திருப்போர் பட்டியல் – சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி டிஜிபியாக நியமனம்
4 – பால நாக தேவி ஐபிஎஸ், சென்னை நிர்வாகத்துறை ஏடிஜிபி – சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம்
5 – அபின் தினேஷ் மோடக் ஐபிஎஸ், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி – சென்னையில் மாநில குற்ற ஆவணக் காப்பகம் ஏடிஜிபியாக நியமனம்
6 – வினித் தேவ் வான்கடே ஐபிஎஸ், சென்னை மாநில குற்றப்பிரிவு ஆவணக் காப்பகம் – சென்னை நிர்வாகத்துறை ஏடிஜிபியாக நியமனம்