சென்னை: அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு அறிவுத்திறன் குறைவு என ஸ்டாண்ட்அப் காமெடியாக பேசிய நகைச்சுவை பேச்சாளரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஐபிஎஸ் அதிகாரியான வருண் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

ஸ்டாண்ட் ஆப் காமெடி செய்யும், நகைச்சுவை பேச்சாளரான அபிஷேக்குமார் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, அரசு பள்ளியில் பயின்றவர்கள் குறைந்த அறிவுத்திறனை உடையவர்கள் என பேசியது சர்ச்சையாகி உள்ளது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல்வேறு தரப்பினரும் ஸ்டாண்ட் ஆப் காமெடியன் அபிஷேக் குமாருக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கு ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் பதில் அளித்துள்ளார். தானும் மாநிலக் கல்வி திட்டத்தில் பயின்றவர் தான், 2010 ல் நடைபெற்ற இந்தியக் குடிமையியல் பணிகள் தேர்வில் இந்திய அளவில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளேன். நானும் அறிவுத்திறன் குறைந்தவர் எனக் கருதுகிறீர்களா? என கேள்வியெழுப்பிள்ளார்.
[youtube-feed feed=1]