ஷார்ஜா:
பிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் – பஞ்சாப் கிங்க்ஸ் அணிகள் இடையே நடந்த போட்டியில் பஞ்சாப் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் –  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே நடந்த போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றன.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்க்ஸ் அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்க்ஸ் அணி 13 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14  புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் தொடரில் நாளை இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் நடக்க உள்ள போட்டியில் சன் ரைஸ்ர்ஸ் ஐதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகளும், துபாயில் நடக்க உள்ள போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ்  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளும் மோத உள்ளன.