புராணக்கதை மகாபாரதத்தில் யுதிஷ்டிரர் அவரது மனைவி திரௌபதியை சூதாட்டத்தில் பணயம் வைத்து இழந்தது போல், உத்தர்பிரதேசம், கான்பூரில் அருகிலுள்ள கோவிந்த்நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண் தனது மனைவியை ஐபிஎல் பந்தய விளையட்டில் பணயம் வைத்து இழந்தார். அந்தப் பெண்ணின் கணவருடைய சக சூதாடிகள் அவருக்குத் தவறான முறையில் தொந்தரவு கொடுக்க தொடங்கிய பின், சமூக ஆர்வலர்கள் உதவியுடன் உள்ளூர் போலீசை அணுகவும், இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.

போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் பெரிய அளவில் உள்ளனர். பங்கு சந்தைகளில் தனது எல்லாப் பணத்தையும் இழந்த பின்னர் அந்த ஆண் ஐபிஎல் சூதாட்டத்தில் அவரது மனைவியைப் பணயம் வைத்து அவரையும் இழந்தாரென போலீசார் கூறினர்.
 
 

“அடிக்கடி தனது கணவன் தன்னை அடித்துத் துன்புறுத்துவார் எனவும், ஒரு முறை அவரது பெற்றோரிடமிருந்து ரூபாய். 7 லட்சம் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தினார் எனவும் அந்த ஆணின் மனைவி கூறினார்,” என்று ஷோவும் கோவிந்த்நகர் SHO அஜய் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா கூறினார்.
இரண்டுப் பேருக்கும் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. ஆனால் முதல் நாளிலிருந்தே அவரது வாழ்க்கை கடினமாக இருந்ததாக, ஒரு பெண்கள் ஆடையக உரிமையாளரான அந்தப் பெண், கூறினார். “திருமணமான முதல் நாள், பங்குச் சந்தையில் ஈடுபட்டிருந்த அவரது கணவர், அவரது நகைகள் மற்றும் இதர சொத்துக்களை ஒப்படைக்குமாறு கேட்டிருக்கிறார்.
 
 
பின்னர், அவரது குடி மற்றும் சூதாட்ட பழக்கங்களைப் பற்றித் தெரிய வந்திருக்கிறது. நாளைடைவில், தங்கள் வீட்டு சொத்து முழுவதையுமே சூதாட்டத்தில் விற்றோ பணயம் வைத்தோ இழந்தார். மேலும் அவர் இந்த ஐபிஎல் சூதாட்டம் படுதோல்வி நடந்த போது வீட்டை விற்கவும் திட்டமிட்டிருந்தார், ” என விசாரணைக் குழுவில் உள்ள் மற்றொரு போலீஸ் அதிகாரி கூறினார்.
“இந்த வழக்கு உண்மையில் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அந்தப் பெண்ணிடமிருந்து எங்களுக்குப் புகார் வந்துள்ளது, அவரது கணவர்மீது நாங்கள் FIR பதிவு செய்துள்ளோம்.
 
அவள் அளித்துள்ள குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு குற்றத்தின் பின்னால் உள்ள சரியான சூழ்நிலை புரிந்து கொள்ள விசாரணையைத் தொடங்கியுள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று கோவிந்த்நகர் SHO அஜய் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா.
 
 
குடியும் சூதாட்டமும் ஒரு பெண்ணின் வாழ்வில் நிம்மதியை கெடுத்துள்ளது.
“குடி குடியைக் கெடுக்கும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் இந்த சம்பவம் விளங்குகின்றது.