துபாய்: ஐபில் தொடரில் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் – டெல்லி அணிகள் மோதுகின்றன.
ராஜஸ்தானைப் பொறுத்தவரை, முதல் 2 போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் எடுத்து மிரட்டியதோடு சரி. அதன்பிறகு, அந்த அணி சாதாரண ரன்களைக்கூட சேஸ் செய்ய முடியாமல் தொடர்ச்சியாக தோல்வியடைந்தே வருகிறது.
அந்த அணியின் ஸ்மித், சஞ்சு மற்றும் ராகுல் ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.
ஆனால், டெல்லி அணியைப் பொறுத்தவரை, புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற மும்பையுடன் போட்டி போடுகிறது.
அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் நல்ல பார்மில் இருக்கிறார். பிரித்விஷா, ஸ்டாய்னிஸ் மற்றும் ரிஷப் பண்ட் போன்றவர்களிடமிருந்தும் ஒத்துழைப்பு கிடைக்கிறது.
ஆனால், கிரிக்கெட் என்பது எந்த சூழலிலும் மாறும் ஒன்று என்பதால், இன்றையப் போட்டியில் யார் வெல்வார்? என்பதை இப்போது நிச்சயம் கணிக்க முடியாது.