அபுதாபி:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
அபுதாபியில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 38-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
கொல்கத்தா அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். கில் 9 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 18 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் இயான் மோர்கனும் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
திரிபாதி அதிரடியாக ஆடி 45 ரன்களைக் குவித்தார். மற்ற வீரர்கள் ஓரளவு ரன்களைச் சேர்க்க கொல்கத்தா அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்களைக் குவித்தது. இரண்டாவது களமிறங்கிய சென்னை அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் மற்றும் பஃப் டூப்ளஸி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார். ரூத்ராஜ் 40 ரன்களிலும், டூப்ளஸி 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசியாகக் களமிறங்கிய ஜடேஜா 19-வது ஓவரில் அதிரடியைக் காட்டி ஆட்டத்தை மீட்டெத்தார்.
சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்து வெற்றியை உறுதிப்படுத்தியது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.