டில்லி:

ம்பதி ராயுடு மிக சீக்கிரமாகவும், விரைவாகவும் தனது ஓய்வை அறிவித்து விட்டார் என்று ஐபிஎல் போட்டிக்குழுவின் தலைவரான ராஜீவ் சுக்லா தெரிவித்து உள்ளார்.

இந்திய அணியின் பிரபலமான கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வந்தவர் அம்பதி ராயுடு. இவர் நேற்று தனது ஓய்வை அறிவித்தார்.

இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,  முன்னாள் அமைச்சரும் ஐபிஎல் தலைவருமான ராஜீவ் சுக்லா, அம்பதி ராயுடு ஓய்வு குறித்து தெரிவித்து உள்ளார்.

நடுத்தர வரிசை பேட்ஸ்மேனான அம்பதி ராயுடு, மிகவும், சீக்கிரமாகவும், அவசரமாகவும் தனது ஓய்வை அறிவித்து விட்டார். தனது பூட்ஸை மிக விரைவில் தொங்க விட்டு விட்டதாகவும், ஆனால், “அவர் தனது காலணிகளைத் தொங்கவிட இதுவே சரியான தருணம் என்று நான் நினைக்கவில்லை, அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட்  திறமை உள்ளது. அவரது திறமை நாட்டிற்கு சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்” என்று வருத்தம் தெரிவித்தும், . அம்பதி ராயுடு  முன்னேற வாழ்த்துக்கள் ”  என்றும் கூறி உள்ளார்.

ந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக வலம் வந்த அம்பத்தி ராயுடுவுக்கு நடப்பு உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக உள்ளதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதாக பிசிசிஐ தேர்வு குழு தெரிவித்தது. இதற்கு அப்போதே அம்பத்தி ராயுடு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், விஜய்சங்கர் காயம் காரணமாக போட்டியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அம்பதி ராயுடுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், பிசிசிஐ மாயக்ங் அகர்வாலை அறிவித்தது.

இதனால் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்த அம்பத்தி ராயுடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உலகக்கோப்பை தொடரில் சொதப்பி வரும் நிலையில் அம்பத்தி ராயுடுவின் ஓய்வு அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மொத்தமாக அம்பத்தி ராயுடு, 55 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 6 டி 20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.