பெங்களூரு: ஐ.பி.எல். 2022) கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் காலை 11மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மெகா ஏலத்தில் 10 அணிகள் பங்கேற்கின்றன.
முதல்கட்டமாக தமிழ்நாட்டு வீரர் அஸ்வினை ரூ.5 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது. அதிக பட்சமாக ஷிகன் தவான், 8.25 கோடிக்கு பஞ்சாபஸ் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. மேலும் பல வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டு வருகின்றனர்.
ஏலப்பட்டியல் 590 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இறுதி செய்துள்ளது. இதில், 370 இந்திய வீரர்களும், 270 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி, ரூ.1½ கோடி, ரூ.1 கோடி, 75 லட்சம், 50 லட்சம், 40 லட்சம், 30 லட்சம், 20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு 46 வீரர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது.
இன்று ஏலம் தொடங்கியதும், முதல் வீரராக இந்திய வீரர் ஷிகர் தவான் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஷிகர் தவானுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 2 கோடிக்கு ஏலத்தைத் தொடங்கியது, பின்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் குதித்தது. இரண்டிற்கும் இடையே ஏலம் முன்னும் பின்னுமாக சென்றது. தவானின் ஏலம் 5 கோடியைத் தாண்டியதால் ஏலம் கேட்ட சில அணிகள் பின்வாங்கின. இறுதியில் நுழைந்த பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் அவரை 8.25 கோடிக்கு வாங்கியது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ்-ஐ, ₹7.25 கோடிக்கு ஏலம் எடுத்தது
பஞ்சாப் கிங்ஸ் அணி தென்னாப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடாவை, 9.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.
டிரெண்ட் போல்ட் 8 கோடிக்கும், நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட்டை, ₹8 கோடிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.
இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யரை ரூ. 12.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஏலம் எடுத்தது.
இந்திய வீரர் முகமது ஷமி, ₹6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.