பெங்களூரு: ஐபிஎல் 2022ம் ஆண்டைய போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று காலை 11 மணி அளவில் பெங்களூருவில் தொடங்கி உள்ளது.

இந்தியா மட்டுமின்றி உலக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் போட்டிகளில், இந்த ஆண்டு நடைபெற உள்ள போட்டிகளில் விளையாட உள்ள வீரர்களுக்கான ஏலம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. ஏற்கனவே டைட்டில் ஸ்பான்இந்த ஐபிஎல் சீசனில் மேலும்  2 புதிய அணிகள் இணைந்து மொத்தம்  10 அணிகள் பங்குபெற்றுள்ளன. ஏற்கனவே ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் ஏலம் நடைபெற்று முடிந்து விட்டது.  இந்த வருடம் முதல் விவோவில் ஐபிஎல் போட்டியின் பேட்ஜை டாடா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனால் டாடா ஐபிஎல் என அழைக்கப்பட உள்ளது.

நடப்பாண்டு 10 அணிகள் இடம்பெற்றுள்ளதால்,  74 போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஐபிஎல் போட்டியின் 10 அணி  உரிமையாளர்களும் தங்கள் அணியில் மொத்தம் 33 வீரர்களை தக்க வைத்துள்ளனர். இந்த ஆண்டு உருவாகியுள்ள இரண்டு புதிய அணி உரிமையாளர்களும் தங்கள் கேப்டன்களை நியமித்து உள்ளனர்.  லக்னோ அணிக்கு கே.எல்.ராகுலும், அகமதாபாத்துக்கு ஹர்திக் பாண்டியாவும் தலைமை வகிக்கின்றனர். மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கும் கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கேகேஆர், ஆர்சிபி, பிபிகேஎஸ் போன்ற அணிகள் திறமையான கேப்டன்களைத் தேடி வருகின்றனர்.

இதுபோக மற்ற வீரர்கள் தேர்வு செய்யும் பணி இன்று தொடங்குகிறது. இந்த போட்டிகளில் ஆட பல வெளிநாட்டு வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி தேர்வு செய்யப்பட உள்ள வீரர்களின் இறுதிப்பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது.

இதுவரை, ஐபிஎல் போட்டியின் 10 அணி  உரிமையாளர்களும் தங்கள் அணியில் மொத்தம் 33 வீரர்களை தக்க வைத்துள்ளனர். இதுபோக மற்ற வீரர்கள் தேர்வு செய்யும் பணி இன்று தொடங்குகிறது.அதன்படி, ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கான 590 வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இறுதி செய்துள்ளது. இதில், 370 இந்திய வீரர்களும், 270 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் தங்களுக்கு பிடித்தமானவர்களை ஏலத்தில் அணிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில்,  ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.

2022 ஐபிஎல் ஏலம், பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் பெங்களூரில்  காலை 11மணி முதல்  நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஏலம் காலை 11 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்ய குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் ஏற்கனவே கேப்டன் உள்பட ஒருசில வீரர்களை அணி நிர்வாகம் எடுத்துள்ள நிலையில், மீதமுள்ள தொகையில்தான் அணி நிர்வாகம் மற்ற வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு அணியிருக்கும் மீதமுள்ள தொகை விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. சிஎஸ்கே – 48 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  2. பிபிகேஎஸ் – 72 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)
  3. எஸ்ஆர்ஹெச் – 68 கோடி (சன் ரைசர்ஸ் ஐதராபாத்)
  4. ஆர்ஆர் – 62 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  5. ஆர்சிபி – 57 கோடி (ராயல் சேலஞ்சர் பெங்களூரு)
  6. எம்ஐ – 48 கோடி (மும்பை இன்டியன்ஸ்)
  7. கேகேஆர் – 48 Cr (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  8. டிசி – 47.5 கோடி (டெல்லி கேப்பிட்டல்ஸ்ஸ்ரீ
  9. லக்னோ-60 கோடி (லக்னோ சூப்பர் ஜெயான்ஸ்)
  10. அகமதாபாத் – 53 கோடி (குஜராத் டைட்டன்ஸ்)