ஹைதராபாத்:
ஐபிஎல் 2023 தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்தது. குல்தீப் யாதவ் 4 ரன், இஷாந்த் ஷர்மா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
145 ரன்கள் இலக்குடன் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் குஜராத் – மும்பை அணிகள் மோத உள்ளன.