மும்பை:
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை எடுத்தது.
190 என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்று 3..30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் சென்னை – ஹைதராபாத் அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் பெங்களுரு – மும்பை அணிகளும் மோத உள்ளன.