லண்டன்:
ஐபிஎல் 2021 போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து டேவிட் மாலனும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்காக அணியிலிருந்து ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் விலகல் உள்ளனர்.
இதுகுறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐபிஎல் – 2021 போட்டியில் இங்கிலாந்தின் டேவிட் மாலனுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஐடன் மார்க்ரம் மாற்றப்படுவார் என்று அறிவித்துள்ளது.
டி 20 உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் தொடருக்கு முன்பு தனது குடும்பத்துடன் சிறிது நாள் ஓய்வில் இருக்க டேவிட் மாலன் விரும்பியதால் அவருக்கு பதிலாக மார்க்ரம் மாற்றப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜானி பேர்ஸ்டோவ் இந்த சீசனில் விலகியுள்ளது தொடர்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜானி பேர்ஸ்டோவ் இந்த ஐபிஎல் சீசனில் விளையாட மாட்டார் என்றும் அவருக்குப் பதிலாக அணியில் இடம் பெற உள்ள வீரர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.